1. மனைவி (கணவனிடம்): தீபாவளிக்கு நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கிக் கொடுக்காதது கூடப் பரவாயில்ல. ஒரு சாதாரண நூல் புடவை வாங்கிக் கொடுத்துட்டு, பட்டுன்னு என் பேரைச் சொல்லிக் கூப்பிட்டு, அடிக்கொரு தடவை 'பட்டு! புடவை நல்லா இருக்கான்னு கேட்டுக்கிட்டு இருக்கறதைத்தான் என்னால சகிச்சுக்க முடியல!
2. "யாராவது முட்டாள்தனமா ஏதாவது சொன்னா, அவங்களோட வாதம் பண்ணக் கூடாது. 'நீங்க சொல்றது சரிதான்'னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். என்ன சொல்றீங்க?'
"நீங்க சொல்றது சரிதான். நான் வரேன்!'